Saturday, April 4, 2026
Your AD Here

இன்று மூத்த ஊடகர் சலீமிற்கு நினைவு கூர்தல் நிகழ்வு…

இன்று மூத்த ஊடகர் சலீமிற்கு நினைவு கூர்தல் நிகழ்வு…அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகர் ஏஎல்எம். சலீமிற்கு இன்று (28) சனிக்கிழமை காரைதீவில் அஞ்சலியுடன் கூடிய நினைவு கூர்தல் நிகழ்வு நடைபெற்றது

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் அரை நூற்றாண்டு காலமாக ஊடகத்துறையில் இன மத வேறுபாடின்றி சமூக சேவையிலும் தனது வாழ்நாளை கழித்து தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம்(ஜேபி) அவர்களின் மறைவையொட்டி இந் கூர்தல் நிகழ்வு நடைபெற்றது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் இவ் அஞ்சலியுடன் கூடிய நினைவு கூர்தல் நிகழ்வு நடைபெற்றது .

முன்னதாக அன்னாருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான வி.ரி.சகாதேவராஜா, எஸ்.பேரின்பராஜா, சிரேஸ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா, தொழிற்சங்கத்தின் ஆலோசகர் செ.இராசையா உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர் .

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்