பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக அந்நாட்டில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் (04.02.2025) இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, ‘தமிழ் ஈழமே எமது நாடு’, ‘தமிழ் ஈழம் ஒன்றே ஒரே தீர்வு’ மற்றும் ‘தமிழர் உரிமைகளை உறுதி செய்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


