தபால் திணைக்களத்தின் போக்குவரத்து சேவைகளை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றும் நோக்கில் ரூ. 59 கோடிக்கும் அதிக மதிப்பில் 10 புதிய லொரிகள் மற்றும் 20 குரூப் கப்” வாகனங்கள் இன்று (13) சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
2025 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் இவ்வாகனங்கள் மூலம் மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திலிருந்து நாடு முழுவதும் COD, SLP Courier உள்ளிட்ட அனைத்து தபால் பொருட்களும் மேலும் விரைவாகவும் திறம்படவும் விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









