ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இன்று (08) முதல் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் அவசரத் தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேசிய அடையாள அட்டை விபரங்களைச் சரிபார்த்தல் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான மாற்று முறைகளை கடைபிடிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான பொதுச் சேவைகள் மற்றும் பிற அலுவலகப் பணிகள் மறு அறிவிப்பு வரை செயல்படாது.
கணினி அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தடையின்றி மீண்டும் தொடங்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.





