இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நேற்றயதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தன்னிடம் 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குறித்த வர்த்தகர் முறைப்பாடு அளித்துள்ளார்.





