Monday, February 9, 2026
Your AD Here

கொள்ளை சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில்  இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை , மந்துவில்லில் உள்ள ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும்  புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தின் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

புதுக்குடியிருபு்பு 10 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனும், மந்துவில்லை சேர்ந்த 24 வயதுடைய  இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Akaran news

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்