Sunday, February 8, 2026
Your AD Here

ஊடக வழிகாட்டுதல் வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது .

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஊடக  வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது .

மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள நிர்வாகிகள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தனித்தனியாக ஊடக  வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த கால அவகாசம் நேற்று (05) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த போதிலும், தபால் மூலமான தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொள்வதற்காக தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்