Tuesday, April 7, 2026
Your AD Here

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம்

வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்றுள்ள வீதியூடாகப் பயணித்த பிரதேசவாசிகள் சிலர் நெளுக்குளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணிகள் மற்றும் குடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்