Tuesday, September 9, 2025
Your AD Here

மக்கள் இன்றி தாக்குதலுக்குள்ளான காருடன் வெறிச்சோடிய பிரச்சார கூட்டம்

முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் நேற்றயதினம் மேடை அமைத்து நடைபெற்றது இதிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர் மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை.

மேலும் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அதன் காட்சிகள் அடங்கிய  புகைப்படங்களும் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்து கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்