Tuesday, April 7, 2026
Your AD Here

புலமைப்பரிசில் பரிட்சத்திகளுக்கான அறிவிப்பு

இவ் வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் http://www.doenets.lkஅல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளங்களுக்குச் சென்று உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்