இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட புதிய விமானம் அடுத்தவாரம் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது .
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Beechcraft King Air 360ER என்ற விமானமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.Textron Aviation எனும் அமெரிக்க நிறுவனம் இந்த Beechcraft King Air 360ER விமானத்திற்கான 11 மில்லியன் அமெரிக்க டொலர் உடன்படிக்கையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்த விமானம் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14.2 மீற்றர் நீளமும், 4.35 மீற்றர் உயரமும் கொண்ட இந்த விமானம், இலங்கையின் கடற்பரப்பில் ரோந்து மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விமான அவசர நோயாளர் காவு வாகனமாகச் செயற்படுவதற்கும் ஏற்ற உட்புறங்களை வழங்கும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.