யாழ்ப்பாணம்: செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று, 45 நாட்கள் நிறைவுக்குப் பிறகு முடிவடைந்தது. முதல் கட்ட அகழ்வுப் பணியின் 9 நாட்களையும் சேர்த்து, மொத்தம் 54 நாட்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட 240 மனித எலும்புக்கூடுகளில், 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1, ஆரம்பத்தில் 11 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. பின்னர், அகழ்வின் தேவைக்கேற்ப விரிவுபடுத்தப்பட்டு, தற்போது 23.40 மீட்டர் நீளமும், 11.20 மீட்டர் அகலமும் கொண்டதாக மாறியுள்ளது.
இதுவரை நடந்த அகழ்வு நடவடிக்கைகளின் போது, 14 சிக்கலான குவியல்களாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், 72-க்கும் மேற்பட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் குறித்த முடிவு, வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, முன்மொழியப்பட்ட பட்ஜெட் மற்றும் இடைக்கால நிபுணர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





