கடந்த 12 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் இவ்வாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.