வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்றைய தினமும் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11,12,13, மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், இன்றைய தினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையில் இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும்.





