Sunday, February 8, 2026
Your AD Here

மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம்!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளின் உண்மைகளைக் கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

எனினும் விசாரணைகளின் பின்னர் நியாயமான தீர்வு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் 3 வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் திணைக்களப் பணிப்பாளர் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்