Sunday, February 8, 2026
Your AD Here

திறைசேரி உண்டியல்கள் நாளை ஏல விற்பனை..

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை, நாளை இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 1,42,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை (02) ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 67 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட கொண்ட 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்