Sunday, February 8, 2026
Your AD Here

குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பதில் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி நியமனம்..

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரியாக பணியாற்றிய ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய 2024.09.25 ஆம் திகதி முதல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர உத்தியோகத்தரான பீ.எம்.டீ.நிலூசா பாலசூரியவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி பதவிக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்