Sunday, March 1, 2026
Your AD Here

அம்பாறையில் தொடரும் மழையால் பெரும்போக நெல் அறுவடை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்போக நெல் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மஜீட்புரம் ஆகிய விவசாய பிரதேசங்களில் அறுவடைப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலமாக தொடர்ச்சியாக செய்து வரும் மழை காரணமாக நெல் அறுவடை செய்ய முடியாமல் காலம் பிற்போடப்படுவதால் வயல் நிலங்களில் காணப்படும் நெற்கதிர்கள் முறிந்து வீழ்ந்து நீரில் மூழ்கி பழுதடைய கூடிய நிலையில் காணப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இதுவரையில் அறுவடை செய்யப்பட்டு வீதியோரங்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் கொட்டி வைக்கப்பட்டு, காய வைக்கப்படுகின்ற நெல், தொடர்ச்சியாகவும் அவ்வப்போதும் பெய்கின்ற மழையில் நனைவதால் அவை ஈரப்பதத்துடன் காணப்படுகின்றது. இதனால் நெல் முளைக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நீண்ட காலம் களஞ்சியப்படுத்த முடியாதுள்ளதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் நெல்லின் விலையினை கடுமையாக குறைத்து விற்பனைக்கு கேட்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்