Sunday, March 1, 2026
Your AD Here

தடையின்றி மருத்துவ சேவைகள் தொடர்கின்றன – சுகாதார பிரதி அமைச்சர்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும், நாட்டின் பொதுவான மருத்துவ சமூகம் நோயாளர்களுக்குத் தடையின்றி சேவைகளை வழங்கி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் சுமார் 90 வீதம் நிதி சார்ந்த நன்மைகளை அடிப்படையாகக் கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை, தற்போதைய டொலர் கையிருப்பு மற்றும் மாற்று விகிதங்களைக் கருத்தில் கொள்ளும்போது நடைமுறைப்படுத்துவது கடினமாகும்

சுகாதாரத் துறையினரின் தொடர்ச்சியான நிதி கோரிக்கைகளை அடுத்து, 2027 வரவு செலவுத் திட்டம் வரை அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கோருவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளாரார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவர்கள் தங்களது மருத்துவக் கடமைகளைத் தடையின்றி முன்னெடுத்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்