Saturday, March 7, 2026
Your AD Here

மாணவர்களின் பத்து வருட விஞ்ஞான பாட ஆசிரியரின் ஏக்கத்தினை நிவர்த்தி செய்த இணைந்த கரங்கள்…

( லோ.கஜரூபன் )

இன்றைய தினம் வெருகல் பிரதேசத்தில் உள்ள தி /மூது/திருவள்ளுவர் மகா வித்தியாலயத்தின் வேண்டுதலுக்கு அமைவாக இன்று 04/03/2026 இணைந்த கரங்களின் ஊடாக விஞ்ஞான பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர்.திரு.தி. உதயணன் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு நிதி பங்களிப்பினை வழங்கும் அவுஸ்ரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த ராஜ்பவன் உணவக உரிமையாளர் திரு.ஜெயராஜ் விஸ்வலிங்கம் அவர்கள் வழங்கி இருந்தார்.

இணைந்த கரங்களோடு பயணிக்கும் மட்டக்களப்பு ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர். து.வித்தியானந்தன், வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர்.. க.தியாகராஜா முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ப. மதிபாலசிங்கம், முதூர் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகரும், விஞ்ஞானபாட வளவாளர், இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், துலக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்