Thursday, September 3, 2026
Your AD Here

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர்உயிரிழந்துள்ளதாக கம்பளை காவல்துறை தெரிவித்துள்ளது

கிடைத்த தகவலுக்கேற்ப காவல்துறையினர் உடனடியாக சம்பவ இ டத்திற்குச் சென்று காயமடைந்தவரை கம்பளை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கம்பளை, கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கோபமடைந்த மருமகன் கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபரான மருமகன் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்