அஸ்வெசும திட்டத்தின் 2ம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31-ம் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக நலம்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜயரத்தின தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறிய குடும்பங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதன் போது சுமார் 4 லட்சத்து 54924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மற்றும் மாவட்டங்களில் இருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம உத்தியோகத்தில் பிரிவிற்கும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலகங்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை கண்காணித்து தொலைபேசி செயலின் மூலம் சமூக பாதுகாப்பு தகவல் பதிவேட்டில் பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
கணக்கெடுப்பு அலுவலகர்கள் தகவல் கட்டமைக்கப்பட்ட பின்னர் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விண்ணப்பதாரர்களின் முழுமையான விபரங்களை கண்காணிக்க முடியும் .கணக்கெடுப்பின் முடிவில் அந்தந்த குடும்பங்களின் தகவல் தேர்வு குழுக்களால் கண்காணிக்கப்படும்.
தேர்வு குழுக்கள் கணக்கெடுத்த குடும்பத்தின் தகவலை கண்காணித்து தெரிவு செய்யப்பட்ட கணக்கீட்டை அங்கீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும். இவ்வாறு தெளிவு கண்காணிக்கப்பட்ட பின்னர் வறுமையை கணக்கெடுப்பதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இது கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை ,சொத்துக்கள், வீட்டு நிலைமை மற்றும் குடும்ப புள்ளி விபரங்கள் ஆகிய ஆறு பரிமாணங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என நலம்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜெயந்த விஜயரத்தின தெரிவித்துள்ளார்.