இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு யாழ்ப்பாணத்தில் இன்று (18) காலை உணர்வுபூர்வமாக மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவிடத்திற்கு வருகை தந்த கட்சியின் முக்கியஸ்தர்கள், அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது நினைவு கூரப்பட்டது.









