தேசிய ஒற்றுமைக்கான சர்வ மத கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் பொரளையில் அமைந்துள்ள Bishop தலைமை காரியாலயத்தில் வணக்கத்திற்குரிய களனி வஜ்ர தேரர் அவர்களின் தலைமையில் ஓரினச் சேர்க்கை சட்டவாக்கத்திற்கு கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதன் போது கார்டினல் ரஞ்சித் மல்கம் மற்றும் வணக்கத்திற்குரிய சோம ரத்தின தேரர், வணக்கத்துக்குரிய ஜீனானந்த தேரர் ,கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா ,கலாநிதி அல் செய்க் ஹசன் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்க கேடான ஓரினச்சேர்க்கை சட்டங்கள் நாகரீக சமூகத்தை அழிக்கின்றது என்ற வகையில் ஜனாதிபதி இச்சட்டவாக்கத்தை அமுல்படுத்தக் கூடாது என்றும் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .