Thursday, January 15, 2026
Your AD Here

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் இவ்வாறு பல்வேறு திட்டங்கள் தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட் நெறிப்படுத்தலுடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் மற்றும் கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன் போது இக்கலந்துரையாடலில் பல்வேறு வர்த்தக நிலையங்களை நடாத்துகின்ற வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன் தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்துஇ நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வலியுறுத்தினார்.

மேலும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் கல்முனை மாநகரில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட வர்த்தகர்கள் தங்களது கருத்துக்களை ஆரோக்கியமாக முன்வைத்ததுடன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற களவு கொள்ளை மற்றும் ஏனைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்ததுடன் உடனடித் தீர்வினையும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பெற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்