கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த 19 வயதுடைய இளைஞன் காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நிந்தவூரைச் சேர்ந்த குறித்த இளைஞன், நேற்றையதினம் (24) தொழுகையில் ஈடுபடுவதாகக் தெரிவித்து குறித்த கடை அமைந்துள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார்.
இதன்போது தனது காதலிக்கு காணொளி அழைப்பை மேற்கொண்ட நிலையில் உயிரை மாய்த்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த இளைஞனின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.