குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் வடமாகாணச் சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகிருந்தனர்.