யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு சென்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அரியாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது பேருந்திலிருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.