வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்தி ஓயா பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்த போதே குறித்த பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கடந்தோலை – பொல்கஹத்தன்ன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.