தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயில் மோதுண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.