திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் தாய் ஒருவர்தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதுடன் நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நோர்வே நாட்டில் வசித்து வந்த இவர் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து திருகோணமலையில் கணவனுடன் வசித்து வந்ததாகவும், பின்னர் குடும்பமாக நோர்வே நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்