பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த கார், மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினரின் கார், கிளிநொச்சி 155 கிலோ மீற்றர் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது எவருக்கும் காயம் ஏற்படாத நிலையில், வாகனத்தின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.