சட்டவிரோதமான முறையில் மரக்கறி தோட்டப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரக்கறி தோட்டத்தில் சிலர் பாரிய குழிகள் தோண்டி சுற்றுச்சூழலை நாசம் செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை, எல்பிட்டிய மற்றும் அனுராதபுரத்தை வசிப்பிடமாகக் கொண்ட 34 – 45 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்படும் ஒருவரின் பின்புலத்திலேயே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளது.