பால்மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பால்மாவின் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விலையைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.நுகர்வோருக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.