Tuesday, September 9, 2025
Your AD Here

ராஜித பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார். 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்