நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நேற்றய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலையின் மகப்பேற்று அறைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, காணொளிப் பதிவு செய்ததாகக் குறித்த வைத்தியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.https://www.akarannews.com/?p=1616இதன்போது, அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.https://www.akarannews.com/?p=1639





