கட்டுநாயக்கவில் கொள்கலன் ஒன்றில் கணினி உதிரிப்பாகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.





