Sunday, February 8, 2026
Your AD Here

நள்ளிரவுடன் நிறைவடையும் அஞ்சல் மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 5ம் திகதியுடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில் அது நாளை நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை எந்தவொரு காரணத்திற்காகவும் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.அதற்கமைய சோஷலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான பாணி சிறிவர்தன கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

மேலும் 3 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்