Sunday, February 8, 2026
Your AD Here

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது

சீசெல்ஸ்ஸில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து பண மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்ய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்