குளவி தாக்குதல் அபாயம் காரணமாக சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குளவி தாக்குதலுக்கு இலக்காகி இன்று பிற்பகல் வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீகிரிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.





