ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர, பிள்ளைர் சந்தியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய நபரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கவுந்திஸ்ஸ புர, ஸ்ரீபுர பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





