Sunday, February 8, 2026
Your AD Here

போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது

இரத்தினபுரி நகரில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபருக்கு பதுளை மஹியங்கனை பொலிஸில் நிதிக் குற்றங்கள் தொடர்பான பல வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நகரில் உள்ள தங்கப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு வந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கு நகையை பெற்றுக்கொண்டு ஐந்தாயிரம் ரூபா போலி நோட்டுகளுடன் செல்லுபடியாகும் ஐந்தாயிரம் ரூபா தாள்களை கடைக்காரரிடம் கொடுத்த போது அவை போலி நாணயத்தாள்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பதுளை பிரதேசத்தை சேர்ந்த இவர் தனது வீட்டில் சில காலமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்