பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
தங்காலை கதுருபொகுன பிரதேசத்தில் அண்மையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று கண்டி பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை கதுருபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ரி-56 ரக தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் ரி-56 ரகத் துப்பாக்கிகளுக்கான 12 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் பதுங்கியிருந்த மற்றைய இரு சந்தேக நபர்களும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .





