Sunday, February 8, 2026
Your AD Here

யாழில் மூன்று பெண்கள் கைது

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து குறித்த பெண்கள் நேற்று காலை கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்ட நிலையில் விடுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய போது இக் கைது இடம்பெற்றுள்ளது .

கைதான யுவதிகள் யாழ். நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

மேலும் கைதான பெண்கள் மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்