Sunday, February 8, 2026
Your AD Here

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தம் சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலம் 

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு சட்டத்தரணி கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, ஜானக வக்கும்புர, சாமர சம்பத் தசனாயக, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, மனோ கணேசன், இரான் விக்கிரமரத்ன மற்றும் ஜகத் குமார சுமித்ராரச்சி ஆகிய உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். 

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்) எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு திருமதி சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கஞ்சன விஜேசேகர,  பிரமித்த பண்டார தென்னகோன், கௌரவ றோஹண திஸாநாயக்க, அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, மனோ கணேசன் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்