Sunday, February 8, 2026
Your AD Here

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையினூடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 4 தரப்பினர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கின் தீர்ப்பு ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் இன்று முற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த ஜூலை மாதம் 6ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.எனினும் அன்றைய தினம் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் குறித்த வழக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்