அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சர்வதேச இந்து மத பீடம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமய நூல் பெறும் பொருட்டு வருடாந்தம் 5000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகின்றது. இதனை பத்தாயிரம் ரூபாய்வாக அதிகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரேரனையாக கொண்டு வந்த வேளை அரச மாற்றம் காரணமாக அது கை கூடவில்லை.
எனவே ஜனாதிபதி அவர்கள் இதனை கருத்தில் எடுத்து, பல அறநெறி ஆசிரியர்கள் இது சம்மந்தமாக கலந்துரையாடி இருபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தெரிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கொரோனா காலத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்திருந்த சீருடைகளும் வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சீருடை வழங்குவதுடன் இந்த வருடாந்த கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளரும் சர்வதேச இந்து மத பீடச் செயலாளருமான கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா அறநெறி பாடசாலைகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக இக்கோரிக்கையை விடுத்துள்ளார். எனவே ஜனாதிபதி இவ்விடையத்தில் கருத்தில் கொள்வார் என்பதில் ஐயமில்லை என சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது .