கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரீ – 56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாவுடன் விமானப்படை பெண் சிப்பாய் ஒருவர் கைதாகியுள்ளார்.
இலங்கையில் இருந்து துபாய்க்குச் செல்ல முற்பட்டபோது விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், குருநாகல் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஓய்வு பெற்ற விமானப்படை சிப்பாயெனத் தெரியவந்துள்ளது.
குறித்த தோட்டா தன்னுடையது இல்லையென விசாரணைகளின்போது அவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.