அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி 1, 2025 முதல் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.