Tuesday, September 9, 2025
Your AD Here

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வீசா வழங்குவது தொடர்பில் எழுந்திருந்த பிரச்சினையும் இதற்கு ஓர் பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வீசா வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், நேற்று நள்ளிரவு முதல் வீசா வழங்கும் நடவடிக்கையானது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்